என் - னின். அடியளவு வரையறையில்லாத செய்யுள் உணர்த்துதல் நுதலிற்று. கலிவெண்பாட்டும். கைக்கிளைப்பொருளைப் பற்றிய பாவும். செவியுறை வாழ்த்து. வாயுறைவாழ்த்து. புறநிலை வாழ்த்து என்றபொருண்மைக்கண் வரும் வெண்பாக்களும் அளவு வரையறுக்கப்படா. பொருள்முடியுங்காறும் வேண்டிய அடிவரப்பெறும் என்றவாறு. (150) 1. ` கைக்கிளைச் செய்யுள் ' என்பது, கைக்கிளைப்பொருட்கு உரித்தாய் வரும் மருட்பா என்றவாறு. அஃதேல், ஈண்டோதிய கலிவெண்பாட்டு மொழிந்த கைக்கிளைப் பொருள்மேல் வாராவோ எனின், வரும் என்பது. (தொல். பொருள். 472. பேரா.) 2. (பாடம்)தொகுநிலை அளவின்.
|