என் - னின். பரிபாடற்கு அடிவரையறை உணர்த்துதல் நுதலிற்று. பரிபாடற் செய்யுள் நானூறடியுயர்பாக இருபத்தைந்தடி இழிபாக வரும் என்றவாறு. எனவே, இடையெல்லா அடியானும் வரப்பெறும் என்றவாறு. கலிப்பாவிலுள் ஒத்தாழிசைக்கு அளவு மேற்கூறப்பட்டது. கலிவெண்பாட்டுக்கு வரையறை யில்லை யெனப்பட்டது. கொச்சகக்கலிக்கு வரையறை கூறாமையாற் பொருண் முடியுங்காறும் வரப்பெறும் என்று கொள்க. அவ்வழிப் பலவுறுப்பாகி வருதலின் அதற்குறுப்பாகிய செய்யுள்விற்றாதல் வேண்டும். உறழ்கலியுங் சொச்சகக் கலிப்பாற்படும். (152) 1. (பாடம்)பரிபாட் டெல்லை.
|