என் - னின். மேற்சொல்லப்பட்ட அறுவகையுமாமாறு உணர்த்துதல் நுதலிற்று. வாய்மொழியெனினும் மந்திரமெனினும் ஒக்கும். அங்கதமாவது ` செம்பொருள் கரந்ததென விருவகைத்தே ' (செய்யுளியல் - 120) என்றதனாற் கரந்தவங்கதமெனினுஞ் சொற்குறிப்பெனினு மொக்கும். அவையாமாறு வருகின்ற சூத்திரத்தாற் காட்டுதும் (155) 1. ` நொடியொடு புணர்ந்த' என்ற மிகையான் இதுவன்றி இது போல்வது பண்ணத்தியென்பதும் ஒன்று உண்டென்பது கொள்க. (தொல். பொருள். 477. பேரா.)
|