என் - னின். நூலாமாறு உணர்த்துதல் நுதலிற்று. நூலென்று சொல்லப்பட்டது எடுத்துக்கொண்ட பொருளொடு முடிக்கும் பொருண்மை மாறுபடாமற் கருதியபொருளைத் தொகையானும் வகையானுங் காட்டி யதனகத்து நின்றும் விரிந்தவுரையோடு பொருத்த முடைத்தாகி நுண்ணியதாகி விளக்குவது நூற்கியல்பு என்றவாறு. அகன்றவுரையோடு பொருந்துதலாவது சொல்லாத பொருண்மையெல்லாம் விரிக்கவேண்டியவழி அதற்கெல்லாம் இடனுண்டாதல் (156) 1. (பாடம்)பொருந்தி.
|