இதுவும் அது. (இ-ள்) நிகழ்ந்தது கூறி நிலையலும் திணை - முன்பு நிகழ்ந்ததனைக் கூறிப் போகா தொழிதலும் பாலைத் திணையாம். உதாரணம் "ஈன்பருந் துயவும் வான்பொரு நெடுஞ்சினைப் பொரியரை வேம்பின் புள்ளி நீழற் கட்டளையன்ன வட்டரங் கிழைத்துக் கல்லாச் சிறாஅர் நெல்லிவட் டாடும் வில்ஏர் உழவர் வெம்முனைச் சீறூர்ச் சுரன்முதல் வந்த உரன்மாய் மாலை உள்ளினென் அல்லனோ யானே உள்ளிய வினைமுடித் தன்ன இனியோள் மனைமாண் சுடரொடு படர்பொழு தெனவே." (நற்றிணை -3) (47)
|