என் - னின். ஓத்திற்கு இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று. ஒத்தவினத்ததாகிய மணியை ஒருங்கே கோவைப்பட வைத்தாற்போல ஓரோரினமாக வரும்பொருளை ஓரிடத்தே சேரவைத்தல் ஓத்தென்று பெயராம் என்றவாறு. எனவே அவ்வினமாகிச் சேர்ந்தநிலைக்கு ஓத்தென்று பெயராயிற்று. அது ` வேற்றுமையோத்து ' என்பதனானறிக. 1. ` நேரினமணி ' யெனவே ஒரு சாதியாயினும் தம்மின் ஒத்தனவே கூறல் வேண்டும் என்பதாம். வேற்றுமை ஒத்தும் வேற்றுமை மயங்கியலும் விளிமரபும் என மூன்றன் பொருளும் வேற்றுமையென ஓரினமென்று ஒரோத்தாக வையாது வேறுவேறு வைக்கப்படும் என்பது. (தொல். பொருள். 482. பேரா.)(160)
|