என் - னின். படலத்திற்கு இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று. ஓரினமாகிய நெறியின்றிப் பலநெறியான் வருவன பொருளானே பொதுமொழியாற் றொடர்வுபடின் அது படலமெனப் பெயராம் என்றவாறு. அது கிளவியாக்க முதலாக எச்சவியல் ஈறாகக் கிடந்த ஒன்பதோத்தினும் வேறுபாடுடையவாயினும், சொல்லிலக்கணம் உணர்த்தினமையாற் சொல்லதிகாரம் எனப் பெயர் பெறுதல். அதிகாரம் எனினும் படலமெனினும் ஒக்கும். (161)
|