என் - னின். மேல் இருவகைப்படும் என்ற உரையை யுரைத்தற்குரியாரை உணர்த்துதல் நுதலிற்று. மகளிர்க்கு உரைக்குமுரை செவிலிக்குரித்து. மைந்தர்க்கு உரைக்குமுரை யெல்லார்க்கு முரித்தென்றவாறு. செவிலி இலக்கணத்தின் உரைக்கின்றவுரையும். பாட்டிலுரைக்கின்றவுரையும் கூறுவளோவெனின். அவ்விடங்களில் வரும் உரை பொருள்பற்றி வருதலின் அப்பொருள் கூறுவளென்க. அன்றியும் ` அதுவே தானும் ' என்பது பொருளொடு புணர்ந்த நகைமொழியைச் சுட்டிற்றாக்கி அம் மொழி யிரண்டு கூறுபடுமெனப் பொருளுரைப்பினும் அமையும். (165) 1. தலைமகளை வற்புறுத்தும் செவிலியர் புனைந்துரைத்து நகுவித்துப் பொழுது போக்குதற்குரியர் என்பது இதன் கருத்து.......... ` மற்றும் ' என்றதனான் அவையன்றி வருகின்ற பிசியும் செவிலியர்க்கு உரித் தென்பது கொள்க. (தொல். பொருள். 287.பேரா.)
|