செய்யுளியல்

478ஒப்பொடு புணர்ந்த உவமத் தானுந்
தோன்றுவது கிளந்த துணிவி னானும்
என்றிரு வகைத்தே பிசிநிலை வகையே.1
என் - னின். பிசியாமாறு உணர்த்துதல் நுதலிற்று.

ஒப்போடே புணர்ந்த உவமை நிலையானும் பிசியாம்; தோன்றுவதனைச் சொன்ன துணிவினானும் பிசியாம் என்றவாறு.

`அச்சுப்போலே பூப்பூக்கும். அமலேயென்னக் காய்காய்க்கும் ' என்பது பிசி. இது உவமைபற்றி வந்தது.

(166)

1. (பாடம்)பிசிவகை நிலையே.