செய்யுளியல்

479நுண்மையுஞ் சுருக்கமும் ஒளியு முடைமையும்
மென்மையும்1 என்றிவை விளங்கத் தோன்றிக்
குறித்த பொருளை முடித்தற்கு வரூஉம்
ஏது நுதலிய முதுமொழி யென்ப.
என் - னின் முதுமொழி யாமாறு உணர்த்துதல் நுதலிற்று.

நுண்மை விளங்கவுஞ் சுருக்கம் விளங்கவும் ஒளியுடைமை விளங்கவும் மென்மை விளங்கவுமென்று இன்னோரன்ன விளங்கவும் தோன்றிக் கருதினபொருளை முடித்தற்கு வரும் ஏதுவைக் குறித்தன முதுமொழியென்று சொல்லுவர் என்றவாறு.

(167)

1. ஒளியுடைமையும் எண்மையும்.