என் - னின். மந்திரம் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. நிறைந்த மொழியையுடைய மாந்தர் தமதாணையாற் சொல்லப்பட்ட மறைந்தசொல் மந்திரமாவ தென்றவாறு. அது வல்லார்வாய்க் கேட்டுணர்க.(168) 1. கிளந்த. 2. தானே என்று பிரித்தான் இவை தமிழ் மந்திரம் என்றற்கும் பாட்டாகி அங்கதம் எனப்படுவனவும் உள, அவை நீங்குதற்கும் என உணர்க. (தொல். பொருள். 480. பேரா.)
|