என் - னின். மேற்சொல்லப்பட்டவற்றைத் தொகுத்து உணர்த்துதல் நுதலிற்று. பொருள்பெற வந்த மேற்சொல்லப்பட்ட களவு கற்பென்னும் இருவகையே கைகோள் வகையாவன என்றவாறு. ஏகாரந் தேற்றம் (176)
1.கைகோள் என்பது ஒழுக்கங் கோடல்; எனவே, அகத்திற்குப் புறனாயினும் புறத்திணைக்குக் கைகோள் அவ்வாறு வேறுவகைப்படக் கூறப்படா; பொதுவகையானே மறைந்த ஒழுக்கமும் வெளிப்பாடும் என இரண்டாகி அடங்கும், அவையும் என்றவாறு. அவை வெட்சியுள்ளும் ஒழிந்த திணையுள்ளும் காட்டப்பட்டன. (தொல். பொருள்.500. பேரா.)
|