என் - னின் மேற்சொல்லப்பட்ட இருவகைக் கைகோளிற்கும் உரியதோர் மரபு உணர்த்துதல் நுதலிற்று. ஊரிலுள்ளாருஞ் சேரியிலுள்ளாரும். அயன் மனையுள்ளாரும் நோய்ப்பக்கங் குறிப்பினாலறிவாருந் தந்தையுந்தமையனும் இருவகைக் கைகோளினும் பட்டதனையுட்கொண்டு பிறிதொன்றை யெடுத்துமொழியினல்லது பட்டாங்குக் கூறுதலின்மை வலியுறுத்தத் தோன்றும் என்றவாறு. எனவே, வலியில்வழிச் சிறுபான்மை நிகழவும் பெறும். "எந்தையும், நிலனுறப் பொறாஅன் சீறடி சிவப்ப எவன்இல குறுமகள் இயங்குதி என்னும்." (அகம்.12) இது தந்தை யுட்கொண்டு கூறியது. பிறவுமன்ன. (179)
|