என் - னின். நற்றாய்க்குரிய மரபு உணர்த்துதல் நுதலிற்று. தலைவனொடுந் தலைவியொடும் நற்றாய்கூற்று நிரம்பத் தோன்றாது என்றவாறு. எனவே, ஏனையோர்க்கே கூறும் என்றவாறாம். உதாரணம் வந்துழிக் காண்க.(180)
1.`முற்ற' என்றதனால் தானே தலைவனாதலால் தலைவன் தமர் யாவரும் கூறார்; முற்கூறப்பட்டார் அல்லர் என்பது கொள்க. (தொல், பொருள்,504.பேரா.)
|