செய்யுளியல்

494ஒண்தொடி மாதர் கிழவன் கிழத்தியொடு
கண்டோர் மொழிதல் கண்ட தென்ப.
என் - னின், கண்டோர்க்குரியதோர் மரபு உணர்த்துதல் நுதலிற்று.

ஒண்டொடி மாதராவார் நற்றாயுந் தோழியுஞ் செவிலியும். இவரொடுந் தலைவனொடுந் தலைவியொடுங் கண்டோர் கூறுதல் காணப்பட்டது என்றவாறு.

எனவே ஏனையோர் கேட்பக் கூறிற்றில்லை என்றவாறாம்.

(181)