என்-னின் ,இது தலைவனுந் தலைவியும் அல்லாதார்க்குரியதோர் மரபு உணர்த்துதல் நுதலிற்று. தலைவனையுந் தலைவியையும் ஒழிந்த பதின்மரும் அத்தலைவனொடுந் தலைவியொடுஞ் சொல்லிப்போந்த மரபினாற் சொல்லப்பெறுவர்; இடமுங் காலமுங் குறித்து என்றவாறு. மொழிந்தாங்கு என்பதனை வழக்கியலாணை யெனினு மமையும் முன்னமாவது:- "இவ்விடத் திம்மொழி இவரிவர்க் குரித்தென் றவ்விடத் தவரவர்க் குரைப்பது." (தொல்,செய்யுளியல்.199) எடுத்தென்பது அறம்பொருளின் பங்கட்குத் தகாத சொற்களை யெடுத்துக்கூறுதல். அஃதாவது தலைவனைப் பார்ப்பானும் பாங்கனும் கழறலும் தோழி இயற்பழித்தலும் , தலைவியைச் செவிலி யலைத்தலும், பாணர் கூத்தர் பாசறையிற்சென்று கூறுதலும், தோழி தலைமகனை வறுபுறத்தலும் முதலாயின.(183)
|