செய்யுளியல்

497மனையோள் கிளவியுங் கிழவன் கிளவியும்
நினையுங் காலைக்1 கேட்குநர் அவரே.
என்-னின் ,இதுவுமது.

தலைவியுந் தலைவனுங் கூறக் கேட்போர் மேற்சொல்லப்பட்ட பதின்மரும் என்றவாறு.

இது முதலாகக் கேட்போரைக் கூறுகின்றது.

(184)

1.`நினையுங்காலை' என்றதனால் தலைமகள் சொல்லக் கேட்போரும் தலைமகன் சொல்லக் கேட்போரும் தலைவனும் தலைவியும் தம்முள் கேட்டனவற்றுக் குரியனவும் ஆராய்ந்து கொள்ளப்படும் மேற்கூறிய வகையான் என்பது. (தொல்,பொருள்.506.பேரா.)