என்-னின் பார்ப்பரும் அறிவருங் கூறுங் கூற்றுக் கேட்போரை உணர்த்துதல் நுதலிற்று. பார்ப்பார் அறிவரென்று சொல்லப்பட்ட இருவர் கூற்றும் எல்லாருங்கேட்கப்பெறுவரென்றவாறு. (185)
1.அறிவர் எனப்படுவார் மூன்றுகாலமும் தோன்ற நன்குணர்ந்தோரும், புலன்நன்குணர்ந்த புலமையோரும் ஆகலானும். இனி பார்ப்பாரும் அவ்வாறே சிறப்புடையராகலானும் அவர்வழி நிற்றல் அவர்க்குக் கடனாதலானும் என்பது. (தொல்,பொருள்.509.பேரா.)
|