செய்யுளியல்

499பரத்தை வாயில் எனவிரு வீற்றுங்1
கிழத்தியைச் சுட்டாக் கிளப்புப் பயனிலவே.
என்-னின்,இதுவு மொருசார் கூற்றிற்குரியா ரியல்பு உணர்த்துதல் நுதலிற்று.

பரத்தையென்று சொல்லப்படும் வேறுபாட்டினும் வாயிலென்று சொல்லப்படும் வேறுபாட்டினுந் தலைமகளைச் சுட்டாத கூற்றுப் பயனில்லை என்றவாறு.

(186)

1.(பாடம்)கூற்றும்.