உள்ளுறை தெய்வம் ஒழிந்ததை நிலம்எனக் கொள்ளும் என்ப குறிஅறிந் தோரே.
இஃது, உள்ளுறையாமாறு உணர்த்துதல் நுதலிற்று,
(இ-ள்) உள்ளுறை தெய்வம் ஒழிந்ததை - உள்ளுறையாவது கருப்பொருட்டெய்வம் ஒழிந்த பொருளை, நிலம் என கொள்ளும் என்ப குறி அறிந்தோர் - இடமாகக் கொண்டுவரும் என்று சொல்லுவர் இலக்கணம் அறிந்தோர்.