செய்யுளியல்

508இவ்விடத் திம்மொழி இவரிவர்க் குரியவனென்
றவ்விடத் தவரவர்க் குரைப்பது முன்னம்.
என்-னின் நிறுத்தமுறையானே முன்னமாமாறு உணர்த்துதல் நுதலிற்று.

இவ்விடத்து இம்மொழியை இவர்க்குச் சொல்லத்தகுமெனக் குறித்து அவ்விடத்து அவர்க்கு அம்மொழியையுரைப்பது முன்னமாம் என்றவாறு.

எனவே, இடமுங் காலமுமுணர்ந்து கேட்போர்க்குத் தக்கவாறு மொழிதலுஞ் செய்யுளுறுப்பாம் என்றவாறு.

வந்ததுகொண்டு வாராதது முடித்த லென்பதனாற் காலமுங்கொள்க.

(195)