செய்யுளியல்

509இன்பமும் இடும்பையும் புணர்வும் பிரிவும்
ஒழுக்கமும் என்றிவை இழுக்குநெறி யின்றி
இதுவா கித்திணைக் குரிப்பொருள் என்னாது
பொதுவாய் நிற்றல் பொருள்வகை என்ப.
என்-னின் ,நிறுத்தமுறையானே பொருள்வகையாமாறு உணர்த்துதல் நுதலிற்று.

இன்பமுந் துன்பமும் - புணர்வும் பிரிவும் ஒழுக்கமுமென்று சொல்லப்பட்டவை வழுவுநெறியின்றி இத்திணைக்குரிய பொருள் இப்பொருளென்னாது எல்லாப் பொருட்கும் பொதுவாகி நிற்கும் பொருளே பொருள்வகையாம் என்றவாறு.

(196)