செய்யுளியல்

515அவற்றுட்
பாஅ வண்ணம்
சொற்சீர்த் தாகி நூற்பாற் பயிலும்.
என்-னின். பாவண்ணமாமாறு உணர்த்துதல் நுதலிற்று.

பாஅ வண்ணமாவது சொற்சீரடியாகி நூலின்கட் பயின்றுவரும் என்றவாறு.

`அ இ உ அம்மூன்றுஞ் சுட்டு .' (தொல்,எழுத் , நூன்மரபு.31)

`கொல்லே ஐயம் எல்லே இயக்கம்.' (தொல்,சொல்,இடை.20)


எனவரும்.

(202)