செய்யுளியல்

516தாஅ வண்ணம்
இடையிட்டு1 வந்த எதுகைத் தாகும்.
(என்-னின்) தாவண்ணமாமாறு உணர்த்துதல் நுதலிற்று.

தாஅ வண்ணமாவது இடையிட்டெதுகையான் வரும் என்றவாறு.


உதாரணம்

"தோடார் எல்வளை நெகிழ நாளும்
நெய்தல் உன்கண் பைதல் கலுழ2
வாடா அவ்வரி ததைஇப் பசலையும்
வைக றோறும் பைபைப் பெருக3
நீடார் இவணென நீமனங்4 கொண்டோர்
கேளார் கொல்லோ காதலர் தோழீ
வாடாப் பௌவம் அறமுகந்5 தெழிலி
பருவஞ் செய்யாது வலனேர்பு வளைஇ
ஓடா மலையன் வேலிற்
கடிது மின்னுமிக் கார்மழைக் குரலே."

(யாப்.வி.ப.38)

என்னும் பாட்டு.
(203)

1. அடியிடையிட்டு வருவது தொடை வேற்றுமையாவதல்லது வண்ண வேற்றுமையாகாதென்பது . ஒரு செய்யுளுட் பலஅடி வந்தால் அவையெல்லாம் இடையிட்டுத் தொடுத்தல் வேண்டுமோ எனின் வேண்டா. அவை வந்தவழித் தாஅ வண்ணம் எனப்படும் என்பது. (தொல்,பொருள்.527.பேரா.)

2. (பாடம்) பைதல் உழவா.

3. பெருகின.

4. இவரென நீள்மணம்

5. வார்முகந்.