செய்யுளியல்

517வல்லிசை வண்ணம் வல்லெழுத்து மிகுமே.1
என்-னின். வல்லிசை வண்ணமாமாறு உணர்த்துதல் நுதலிற்று.

வல்லெழுத்து மிக்குவருவது வல்லிசை வண்ணமாம் என்றவாறு.

"வட்டொட்டி யன்ன வனமுடப்2 புன்னைக்கீழ்க்
கட்டிட்டுக் கண்ணி தொடுப்பவர் தாழைப்பூத்
தொட்டிட்டுக் கொள்ளுங் கடற்சேர்ப்பன் நின்னொடு
பட்டொட்டி யுள்ளம் விடாது நினையுமேன்
விட்டோட்டி நீங்காதே ஒட்டு."

(யாப்.வி.ப.382)

(204)

1.(பாடம்) பயிலும்.

2.பட்டொட்டியன்ன தொடர்பு முடப்.

(204)