செய்யுளியல்

518மெல்லிசை வண்ணம் மெல்லெழுத்து மிகுமே.
என்-னின் . மெல்லிசைவண்ணம் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.

மெல்லெழுத்து மிக்கது மெல்லிசை வண்ணமாம் என்றவாறு.

"பொன்னின் அன்ன புன்னை நுண்தாது
மணியின் அன்ன நெய்தலங் கழனி
மனவெண உதிரு மாநீர்ச் சேர்ப்ப
மாண்வினை நெடுந்தேர் பூண்மணி யொழிய
மம்மர் மாலை வாநீ
நன்மா மேனி நயந்தனை எனினே."

(யாப்.வி.ப.382)

எனவரும்.

(205)