செய்யுளியல்

519இயைபு வண்ணம் இடையெழுத்து மிகுமே.
என்-னின். இயைபுவண்ணம் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.

இடையெழுத்துமிக்கு வருவது இயைபுவண்ணமாம் என்றவாறு.

"வால்வெள் ளருவி வரைமிசை இழியவும்
கோள்வல் உழுவை விடரிடை இயம்பவும்
வாளுகிர் உளியம் வரையகம்இசைப்பவும்
வேலொளி விளக்கிநீ வரினே
யாரோ தோழி வாழ்கிற் போரே."

(யாப்.வி.ப.383)

எனவரும்.

(206)