செய்யுளியல்

520அளபெடை வண்ணம் அளபெடை பயிலும்.
என்-னின்.அளபெடை வண்ணம் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.

அளபெடைபயின்று வருவது அளபெடை வண்ணமாம் என்றவாறு.

"தாஅட் டாஅ மரைமலர் உழக்கி
பூஉக் குவளைப் போஒ தருந்திக்
காஅய்ச் செந்நெற் கறித்துப் போஒய்
மாஅத் தாஅள் மோஒட் டெருமை."

(யாப். வி. பி. 158)

எனவரும்.

(207)