செய்யுளியல்

521நெடுஞ்சீர் வண்ணம் நெட்டெழுத்துப் பயிலும்.
என்- னின், நெடுஞ்சீர் வண்ணம் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.

நெட்டெழுத்துப் பயின்றுவருவது நெடுஞ்சீர் வண்ணமாம் என்றவாறு.

"நீரூர் பானா யாறே காடே
நீலூர் காயாப் பூவீ யாவே
காரூர் பானா மாவே யானே
யாரோ தாமே வாழா மோரே
ஊரூர் பாகா தேரே
பீரூர் தோளாள் பேரூ ராளே."

(யாப். வி.ப. 383)

எனவரும்.

(208)