செய்யுளியல்

522குறுஞ்சீர் வண்ணங் குற்றெழுத்துப் பயிலும்.
என் - னின் , குறுஞ்சீர் வண்ணம் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.

குற்றெழுத்துப் பயின்றுவருவது குறுஞ்சீர் வண்ணமாம் என்றவாறு.

"உறுபெய லெழிலி தொகுபெயல் பொழியச்
சிறுகொடி அவரை பொரிதளை யவிழக்
குறிவரு பருவம் இதுவென மறுகுபு
செறிதொடி நலமிலை யழியல்
அறியலை அரிவை கருதிய பொருளே."

(யாப். வி. ப. 384)

எனவரும்.

(209)