செய்யுளியல்

524நலிபு வண்ணம் ஆய்தம் பயிலும்.
என்- னின் . நலிபுவண்ணம் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.

ஆய்தம் பயின்றுவருவது நலிபுவண்ணமாம் என்றவாறு.

"அஃகாமை செல்வத்துக் கியாதெனின் வெஃகாமை
வேண்டும் பிறன்கைப் பொருள்."

(குறள். 178)

எனவரும்.

(211)