செய்யுளியல்

525அகப்பாட்டு வண்ணம்
முடியாத் தன்மையின் முடிந்ததன் மேற்றே.
என் - னின் அகப்பாட்டு வண்ணம் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.

அகப்பாட்டு வண்ணமாவது முடியாத்தன்மையான் முடிந்ததன் மேலதென்றவாறு.

"பன்மீன் உணங்கற் படுபுள் ளோப்பியும்
புன்னை நுண்தாது நம்மொடு தொடுத்தும்
பன்னாள் வந்து பணிமொழி பயிற்றி
தோழி நீங்காமை சூளில் தேற்றியும்
மணந்ததற் கொவ்வான் தணந்து புறமாறி
இனைய னாகி ஈங்குனைத் துறந்தோன்
பொய்த லாயத்துப் பொலங்கொடி மகளிர்
கோடுயர் வெண்மணல் ஏறி
ஓடுகலம் எண்ணும் துறைவன் தோழி."

(யாப். வி. ப. 385)

எனவரும்.

(212)