என்-னின் புறப்பாட்டு வண்ணம் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. புறப்பாட்டு வண்ணமாவது முடிந்தது போன்று முடியாதாகிவரும் என்றவாறு. உதாரணம்"நிலவுமண லகன்துறை வலவ னேவலின் எரிமணிப் புள்ளின மொய்ப்ப1 நெருநலும் வந்தன்று கொண்கன் தேரே இன்றும் வருகுவ தாயின் சென்று சென்று தோன்றுபு துதைந்த புன்னைத் தாதுகு தண்பொழில் மெல்லக வனமுலை நெருங்கப் புல்லின் எவனோ மெல்லியல் நீயும் நல்காது விடுகுவை யாயின் அகலும் படர்மலி உள்ளமொடு மடல்மா வேறி உறுதுயர் உலகுட னறியநம் சிறுகுடிப் பாக்கத்துப் பெரும்பழி தருமே." (யா.வி.ப. 385) எனவரும்.(213)
1.(பாடம்) இன்றி மணிப்புள் இனமெடுப்ப.
|