செய்யுளியல்

527ஒழுகு வண்ணம் ஓசையி னொழுகும்.
என் - னின் ஒழுகுவண்ணம் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.

ஓசையான் ஒழுகிக்கிடப்பது ஒழுகுவண்ணமாம் என்றவாறு.


உதாரணம்

"அம்ம வாழி தோழி காதலர்
இன்முன் பனிக்கும் இன்னா வாடையொடு
புன்கண் மாலை அன்பின்று நலிய
உய்யலள் இவளென உணரச் சொல்லிச்
சொல்லுநர்ப் பெறினே செய்ய வல்ல
இன்னனி யிறந்த மன்னவர்
பொன்னணி நெடுந்தேர் பூண்ட மாவே."

(யா.வி.ப. 386)

எனவரும்.

(214)