என் - னின் , அகைப்பு வண்ணம் உணர்த்துதல் நுதலிற்று. அறுத்தறுத்தியலுவது அகைப்பு வண்ணமாம் என்றவாறு. உதாரணம்"தொடுத்த வேம்பின்மிசைத் துதைந்த போந்தையிடை அசைந்த வாரமலைப் பட்டு ரண்ணலென்பான் இயன்ற சேனைமுர சிரங்குந் தானையெதிர் முயன்ற வேந்தருயிர் முருக்கும் வேலினவன்." (யாப்.வி.ப.387) எனவரும்.(217)
|