செய்யுளியல்

531தூங்கல் வண்ணம் வஞ்சி பயிலும்.
என் - னின் , தூங்கல் வண்ணம் உணர்த்துதல் நுதலிற்று.

தூங்கல் வண்ணமாவது வஞ்சியுரிச்சீர் பயின்று வரும் என்றவாறு.


உதாரணம்

"வசையில்புகழ் வயங்குவெண்மீன்
திசைதிரிந்து தெற்கேகினும்."

(பட்டினப்.1)

எனவரும்

(218)