செய்யுளியல்

532ஏந்தல் வண்ணம்
சொல்லிய சொல்லிற் சொல்லியது சிறக்கும்.
என் - னின் ஏந்தல் வண்ணம் உணர்த்துதல் நுதலிற்று.

ஏந்தல் வண்ணமாவது சொல்லிய சொல்லினானே சொல்லப்பட்டது சிறக்கவரும் என்றவாறு.


உதாரணம்

"கூடுவார் கூடல்கள் கூட லெனப்படா
கூடலுட் கூடலே கூடலுங் கூடல்
அரும்பிய முல்லை யரும்பவிழ் மாலைப்
பிரிவிற் பிரிவே பிரிவு."

(யாப்.வி.ப.388)

எனவரும்.

(219)