செய்யுளியல்

534முடுகு வண்ண முடிவறி யாமல்
அடியிறந் தொழுகி அதனோர் அற்றே.1
என் - னின். முடுகு வண்ணம் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.

முடுகு வண்ணமாவது நாற்சீரடியின் மிக்கோடி அராகத்தோடு ஒக்கும் என்றவாறு.


உதாரணம்

"நெறியறி செறிகுறி புரிதிரி பறியா வறிவனை முந்துறீஇ"

(கலித். 39)
(221)

1. (பாடம்) அடியிறந்தோடி யதனோரற்றே.