என் - னின் மேற்கூறப்பட்ட வண்ணமெல்லாந் தொகுத்து உணர்த்துதல் நுதலிற்று. வண்ணங்களாவன மேற்சொல்லப்பட்டன என்றவாறு. இதனாற் பெற்றது என்னை? இப்பொருண்மை மேலே பெறப்பட்டதால் எனின், ஒரு பயன்கருதிக் கூறினார் என்க. வண்ணம் பாகுபடுகின்றது தொடையினான் அன்றே; இன்னும் வேறொருவாற்றாற் பாகுபடுப்பப் பலவாம் என்பது அறிவித்தல். அது குறில் நெடில் வல்லினம் மெல்லினம் இடையினம் என நிறுத்து அகவல். ஒழுகிசை , வல்லிசை, மெல்லிசை என்ற நான்கனொடும் உறழ இருபதாம் . அவற்றைத் தூங்கிசை , ஏந்திசை , அடுக்கிசை , பிரிந்திசை , மயங்கிசை என்பனவற்றோடுறழ நூறாம். அவற்றைக் குறிலகவற் றூங்கிசை வண்ணம், நெடிலகவற்றூங்கிசை வண்ணம் என ஒருசாராசிரியர் பெயரிட்டு வழங்கப. (222)
|