செய்யுளியல்

5361சின்மென் மொழியால்2 சீர்புனைந் தியாப்பின்
அம்மை தானே அடிநிமிர் வின்றே.
என் - னின் . நிறுத்தமுறையானே அம்மையாகிய செய்யுள் உணர்த்துதல் நுதலிற்று.

சிலவாய் மெல்லியவாகிய மொழியினானே தொடுக்கப்பட்ட அடிநிமிர்வில்லாத செய்யுள் அம்மையாம் என்றவாறு.


உதாரணம்

"அறிவினான் ஆகுவதுண்டோ பிறிதினோய்
தன்னோய்போற் போற்றாக் கடை."

(குறள். 315)

எனவரும்.
(223)

1.(பாடம்) வனப்பியறானே வகுக்குங் காலைச் சின்மென் மொழியால் சீர்புனைந்தியாப்பின் அம்மை தானே யடிநிமிர் வின்றே.

2.பல செய்யுளும் உறுப்பாய்த் திரண்டு பெருகிய தொடர்நிலையதே வனப்பென்னும் பெயர்ப்பகுதிவகையான் ஏற்பது ....... அம்மை என்பது குணப்பெயர், அமைதிப்பட்டு நிற்றலின் , (தொல் , பொருள். 547.பேரா.)