என்-னின் மேல் அதிகரிக்கப்பட்ட மூவகைப் பெயர்க்குஞ் சிறப்பு விதியுடையன இச்சூத்திரமுதலாக வருகின்ற சூத்திரங்களாற் கூறப்படுகின்றன. மேற் சொல்லப்பட்டவற்றுட் பார்ப்பு பிள்ளையென்னும் இரண்டும் பறவையி னிளமைப் பெயர் என்றவாறு. இவ்வோத்திற் சூத்திரத்தாற் பொருள் விளங்குவனவற்றிற்கு உரை யெழுதுகின்றிலம். (4)
|