மரபியல்

552நாயே பன்றி புலிமுயல் நான்கும்
ஆயுங் காலைக்1 குருளை என்ப.

என்றது, நாய்முதலாகச் சொல்லப்பட்ட நான்கின் இளமைப்பெயர் குருளை யென்று வழங்கும் என்றவாறு.

(8)

1. ஆயுங்காலை என்றதனால் `சிறு வெள்ளரவின் அவ்வரிக் குருளை' என்பதும் கொள்க. (தொல். பொருள். 563. பேரா.)