மரபியல்

555பிள்ளைப் பெயரும் பிழைப்பாண் டில்லை
கொள்ளுங் காலை1 நாயலங் கடையே .

என்-னின். இதுவுமது.

மேற்கூறியவற்றுள் நாயன்றி ஒழிந்தவை பிள்ளை என்னும் இளமைப்பெயர்க்கு உரிய என்றவாறு.

பன்றிக்குருளை பன்றிக்குட்டி பன்றிப்பறழ் பன்றிப்பிள்ளை எனவுமாம்.

ஏனையவும் இவ்வாறே ஒட்டிக் கொள்க.

(11)

1. `கொள்ளுங்காலை' என்றதானான் முற்கூறிய நாய் முதலாகிய நான்கும் விலக்கி நரிப்பிள்ளை என்பதே கோடலும் ஒன்று. (தொல். பொருள். 566. பேரா.)

(11)