என்றது யாடு முதலாகச் சொல்லப்பட்ட ஐந்துயிரும் மறி என்னும் இளமைப்பெயர் பெறும் என்றவாறு. நவ்வி - புள்ளிமான். (12)
1. நவ்வியும் உழையும் புல்வாயுள் அடங்குமன்றே, அவற்றை மூன்றாக ஓதியதென்னை? நாய் என்றதுபோல அடங்காதோ எனின், மா வென்பது குதிரையும் யானையும் புலியும் சிங்கமும் முதலாயவற்றுக் கெல்லாம் பெயராகலின் அவ்வாறு ஓதான் என்பது . `ஓடும் புல்வாய்' என்றதனானே மடனுடையன நவ்வி எனவும் இடைநிகரன உழை எனவும் கொள்க. (தொல். பொருள். 567. பேரா.)
|