மரபியல்

557கோடுவாழ் குரங்கு1 குட்டியுங் கூறுப.

கோடுவாழ் குரங்கென்பது ஊகமூ முசுவுங் கொள்ளப்படும்.

உம்மை எதிரதுதழீஇய எச்சவும்மை.

(13)

1. `கோடுவாழ் குரங்கு' எனவே குரங்கின் பிறப்புப்பகுதி எல்லாம் கொள்க. அவை குரங்குக்குட்டி, முசுக்குட்டி, ஊகக்குட்டி என்பன, உம்மை இறந்தது தழீஇயிற்று. ஆதலான் மேற்கூறிய யாடு முதலாகிய ஐந்து சாதிக்கும் குட்டி என்னும் பெயர் கூறப்படும் என்பது. (தொல். பொருள். 548. பேரா.)