மரபியல்

558மகவும் பிள்ளையும் பறழும் பார்ப்பும்
அவையும் அன்ன அப்பா லான .

என்-னின். இதுவுங் குரங்குக் குரியதோர் இயல்பு உணர்த்துதல் நுதலிற்று.

மகவு முதலாகிய நான்குங் குரங்குச்சாதி இளமைப் பெயராம் என்றவாறு.

குரங்குக்குட்டி, குரங்குமகவு, குரங்குப்பிள்ளை, குரங்குப்பறழ், குரிங்குப்பார்ப்பு.

(14)