மரபியல்

573நந்தும் முரளும் ஈரறி வினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே.

என்-னின், ஈரறிவுயிர் உணர்த்துதல் நுதலிற்று.

ஈரறிவுயிராவன நந்தும், முரளுமென்று சொல்லுவ; பிறவுமுள ஈரறிவுயிரென்றவாறு.

நந்து என்றதனால் சங்கு, நத்தை, அலகு, நொள்ளை என்பன கொள்க. முரள் என்றதனால் இப்பி, கிளஞ்சில், எரல் என்பன கொள்க.

(29)