மரபியல்

574சிதலும் எறும்பும் மூவறி வினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே.

என்-னின், மூவறிவுயிராமாறு உணர்த்துதல் நுதலிற்று.

சிதலும், எறும்பும், மூவறிவின; அக்கிளைப் பிறப்பு பிறவு முள என்றவாறு.

பிற ஆவன அட்டை முதலாயின.

(30)