மரபியல்

575நண்டுந் தும்பியும் நான்கறி வினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே.

என்-னின், நாலறிவுயிராமாறு உணர்த்துதல் நுதலிற்று.

நண்டும், தும்பியுமென நாலறிவையுடைய; அக்கிளைப் பிறப்பு பிறவு முள என்றவாறு.

பிறவு மென்றதனான் ஞிமிறு, சுரும்பென்பன கொள்க.

(31)