மரபியல்

578ஒருசார் விலங்கும் உளவென மொழிப.

என்-னின். இதுவுமது.

விலங்கினுள் ஒருசாரனவும் ஆறறிவுயிரா மென்றவாறு.

அவையாவன கிளியுங் குரங்கும் யானையும் முதலாயின.

மேல் ஓரறிவுயிரெனத் தோற்றுவித்தார்; அதனானே இச்சூத்திரங்கள் ஈண்டுக் கூறப்பட்டன.

(34)